Home Tamil Cinema News ‘கமல் போலி மருத்துவ தொழில் செய்ய வேண்டாம்!’: அரசு சித்த மருத்துவர்கள் சங்கம்

‘கமல் போலி மருத்துவ தொழில் செய்ய வேண்டாம்!’: அரசு சித்த மருத்துவர்கள் சங்கம்

50

தெரியாத விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள கமல், நிலவேம்பு குடிநீர் பற்றிய சந்தேகம் தீர, ஏதாவது ஒரு சித்த மருத்துவரை அணுகியிருக்கலாம் என்றும், அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கமல் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றாரே தவிர, நிஜ மருத்துவர் ஒன்றும் இல்லை என்றும், நில வேம்பு பற்றி தெரியாமல் கருத்து தெரிவித்த கமலும் ஒரு போலி டாக்டர் தான் என்றும் அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் விமர்சித்துள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, கடுமையாக உழைத்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு சித்த மருத்துவரும் கமலின் கருத்தால், மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது. எனவே, தேவை இன்றி,மருந்துகளை பற்றி பேசி, கமல் போலி மருத்துவ தொழில் செய்ய வேண்டாம் என்றும் அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here