Home Tamil Sports News காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் குமாருக்கு தங்கப் பதக்கம்

காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் குமாருக்கு தங்கப் பதக்கம்

74
SHARE

காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் விளையாட அவர் தகுதி பெற்றுள்ளார்.

காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ் குமார், ஸ்நாட்ச் பிரிவில் 148 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 172 கிலோ என மொத்தம் 320 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

இதேபோல் 85 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் வெங்கட் ராகுல் ஸ்நாட்ச் பிரிவில் 156 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க்கில் 195 கிலோ என ஒட்டுமொத்தமாக 351 கிலா தூக்கி தங்கம் வென்றார். – பிடிஐ

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here