Home Tamil Movie Reviews தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம்

தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம்

362
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

ஜெய் நடிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என ஹிட்டானாலும், ஒரு சில தவறான கதை தேர்வால் திரைத்துரையில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்.

2.5
இயக்கம்: பிரேம் சாய்
ஒளிப்பதிவு: சத்யா பொன்மார்
இசை: கார்த்திக்
தயாரிப்பு: கவுதம் மேனன்
நடிகர்கள்: ஜெய், யாமி கௌதம் சந்தானம், விடிவி கணேஷ், அஸ்டோஸ் ராணா, தம்பி ராமையா, நாசர், சரண்யா பொன்வண்ணன்

ஜெய் நடிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என ஹிட்டானாலும், ஒரு சில தவறான கதை தேர்வால் திரைத்துரையில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்.

00-FEATURE6-1140x760

படத்தின் கதைப்படி, ஜெய் கல்லூரி படிப்பை பாதியிலே முடித்துவிட்டு ஊரிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னை வரும் ஜெய் தனது மாமா விடிவி கணேஷுடன் தங்கிக் கொண்டு, அவர் சொல்லும் ஒவ்வொரு வேலைக்கும் சென்றுவிட்டு, பாதியிலேயே அந்த வேலை பிடிக்கவில்லை என்று சொல்லி திரும்பி வருகிறார்.

இந்த நிலையில், ஜெய் கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பன் சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் இவரும் கூடவே சென்று வருகிறார். அப்போது, ஒருநாள் நாயகி யாமி கௌதமை பார்க்கும் ஜெய் அவள்மீது காதல் வயப்படுகிறார்.

73768_thumb_665

யாமி கௌதமை தினமும் சந்திப்பதற்காக அவள் இருக்கும் ஏரியாவில் கொரியர் சப்ளை செய்யும் பணிக்கு சேர்கிறார். கொரியர் சப்ளை செய்வதுபோல் அவளை தினமும் சந்தித்து தனது காதலை வளர்க்கிறார். ஒருகட்டத்தில் யாமி கௌதமும் ஜெய் மீது காதல்வயப்படுகிறார்.

இதனிடையே, சென்னையில் மிகப்பெரிய டாக்டரான அஸ்டோஸ் ராணா, சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு வேலைகளை செய்து, அந்த கருமுட்டைகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்து அதன்மூலம் பல கோடிகள் சம்பாதித்து வருகிறார்.

இதை அறியும் தம்பி ராமையா, ராணாவை நேரடியாக எதிர்க்கமுடியாது என்பதற்காக சமூக ஆர்வலான நாசரின் உதவியை நாடுகிறார். ராணா செய்துவரும் தில்லுமுல்லுகள் பற்றிய விவரங்களை சேகரித்து அதை நாசருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறார்.

13CP_Tamilselvan_J_2545389g

அந்த விவரங்கள் அடங்கிய பார்சலை சப்ளை செய்யும் பொறுப்பு ஜெய்க்கு வருகிறது. மறுபுறம் தம்பி ராமையா தன்னைப் பற்றிய விவரங்களை பார்சலாக அனுப்பிய விஷயம் ராணாவுக்கு தெரிய வருகிறது.

அது நாசரிடம் சென்றடையாமல் எப்படி தடுப்பது என்ற முயற்சியில் இறங்குகிறார். இறுதியில், நாசரின் கைக்கு அந்த பார்சல் கிடைத்ததா? அல்லது, அந்த பார்சலை அடைவதற்கு ராணா அந்த பார்சலை அபகரித்தாரா? என்பது தான் மீதிக்கதை.

ஜெய் முந்தைய படங்களை போலவே துறுதுறு பையனாக கலக்குகிறார், சந்தானம், விடிவி கணேஷுடன் சேர்ந்து கலாட்டா செய்து ஜாலியாகவும், பிறகு பிரச்சனை வந்த பிறகு சீரியஸாகவும் மாறி தன் வேலையை சிறப்பாக செய்கிறார்.

TamilselvanumThaniyar-Anjalum-movie-Stills-6

 

பாலிவுட் வரவான யாமி கௌதம் அழகாக இருக்கிறார், ஆனால் அவர் நடிப்பிற்கு படத்தில் எந்த வேலையும் இல்லை, வில்லன் கதாபாத்திரம் கொஞ்சம் சொதப்பல் தான்.

தம்பி ராமையாவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கின்றது, முதல் படத்திலேயே ஒரு நல்ல மெசெஜை சொல்ல வந்த பிரேம் சாய்யை பாராட்டலாம். விடிவி கணேஷ், சந்தானம் ரெண்டு பேரும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள். சந்தானம் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் அனைத்தும் புதிதாக கேட்பதுபோலவே இருப்பது சிறப்பு.

டாக்டராக அஸ்டோஸ் ராணாவின் நடிப்பு மிரட்டும்படியாக இல்லை. அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம். நாசர், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.

சட்டத்திற்கு புறம்பாக செய்யப்படும் கருக்கலைப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய வியாபாரம் இருப்பதாக இப்படத்தில் இயக்குனர் பிரேம் சாய் சொல்ல வந்திருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

directed-gautam-premsai-tamilselvanum-thaniyar-anjalum-stars_a92fc2ca-5ac5-11e6-8032-7fbe78900359

குழப்பும்படியான காட்சிகளை அமைக்கமால், ரசிகர்களை எளிதாக சென்றடைய என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார். படத்தின் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருக்கலாம்.

சத்யாவின் ஒளிப்பதிவும், பிரவீணின் படத்தொகுப்புமே படத்திற்கான வேகத்தை கொடுக்கிறது. முதல் பாதியில் இருக்கும் வேகம், இரண்டாம் பாதியில் இல்லை. கார்த்திக் இசையில் பாடல்கள் அழகாக இருக்கிறது. சந்தீப் கௌடாவின் பின்னணி இசையும் அருமை.

மொத்தத்தில் ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ – விறுவிறுப்பும், வேகமும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here