Home World News அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி தமிழர்கள் குழு சிறிசேனாவுடன் சந்திப்பு

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி தமிழர்கள் குழு சிறிசேனாவுடன் சந்திப்பு

27

கொழும்பு : இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்குப்பிறகு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னாள் விடுதலைப்புலிகளான அவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் காலவரையின்றி சிறையில் அடைக்க முடியும்.

வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழர்கள் அடங்கிய குழு ஒன்று அதிபர் சிறிசேனாவை சந்தித்தனர். அப்போது அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த சிறிசேனா, இந்த பிரச்சினை தொடர்பாக அட்டார்னி ஜெனரல் ஜெயந்தா ஜெயசூர்யா மற்றும் நீதித்துறை மந்திரி தலதா அதுகோரலே ஆகியோருடன் விவாதித்து முடிவு எடுப்பதாக உறுதியளித்தார்.