Home Tamil Breaking News தமிழக அரசு: ரேஷன் சர்க்கரை விலை ரூ.25 ஆக உயர்வு; நவம்பர் 1 ந்தேதி முதல்...

தமிழக அரசு: ரேஷன் சர்க்கரை விலை ரூ.25 ஆக உயர்வு; நவம்பர் 1 ந்தேதி முதல் அமல்

31

சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.11.50 உயர்த்தப்பட்டு ரூ.25க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது. வரும் 1 ம் தேதி முதல் இந்த புதிய விலை அமலுக்கு வருகிறது. இதனால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் 1.90 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல்துறைகள் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 351 ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 6.70 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பச்சை மற்றும் வெள்ளை நிற ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் வெள்ளை நிற ரேஷன் கார்டுகளை சுமார் 10 லட்சம் பேர் வைத்துள்ளனர். அவர்களுக்கு 5 கிலோ சக்கரை வழங்கப்படுகின்றன.

பச்சை நிற ரேஷன் கார்டுகள் சுமார் 1.86 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அதிக பட்சமாக 2 கிலோ சக்கரை, 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகின்றன.

நவம்பர் 1 முதல் அந்தியோதயா அன்னயோஜனா பயனாளிகளுக்கு மட்டும் கிலோ ரூ.13.50 விலையில் வழங்கப்படும். மற்றவர்களுக்கு கிலோ ரூ.25க்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்க்கரை மட்டும் ெபறும் பயனாளிகளுக்கும் கிலோ ரூ.25க்கு வழங்கப்படும். இந்த விலை உயர்ந்த போதும் வெளிமார்க்கெட்டில் ரூ.45க்கு விற்கப்படும் சர்க்கரை ரூ.20 மானியம் வழங்கி கிலோ ரூ.25க்கு மட்டுமே வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 836.29 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

தமிழக அரசின் இந்த அரசாணைப் படி அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 18.64 லட்சம் பேர் மட்டுமே ரூ.13.50க்கு வாங்க முடியும். மீதம் உள்ள சுமார் 1.88 லட்சம் பேர் சக்கரை கிலோ ரூ.25 கொடுத்து வாங்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.