Home Tamil Cinema News தமிழகத்திற்கு உதவும் தெலுங்கு, மலையாள நடிகர்கள்

தமிழகத்திற்கு உதவும் தெலுங்கு, மலையாள நடிகர்கள்

202

telengu

சென்னையின் பெருவெள்ளத்தில் அவதிப்படும் மக்களிற்காக அனைத்திந்தியநடிகர்கள் உதவ முன்வந்துள்ளனர். வரலாறு காணாத மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை வெள்ளத்தில் பறிகொடுத்துவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு வெள்ளப்பகுதிகளில் பரிதவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரங்களை நீட்டி வருகிறார்கள்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெள்ளத்தில் தவிக்கும் சென்னை மக்களின் நிலை கண்டு தான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக கூறி உள்ளார். மேலும் சென்னையில் உள்ள தனது வீடு உறவினர்கள் வீடு உள்பட 20–க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கிக்கொள்ள அவர் ஏற்பாடு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தான் தயாராக இருப்பதாகவும் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

malayalam

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். அவர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அனுப்பி இந்த நிதியை வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சென்னை மக்களுக்கு அனைவரும் உதவும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்கு நடிகர்களும் தங்கள் பங்கிற்கு நிதியுதவிகள் தந்தவாறு இருக்கின்றனர். இந்த நிதி அனைத்தும் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு சென்றடைந்து, அதன் பிறகு தமிழக அரசின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. தெலுங்கு நடிகர்கள் தந்த உதவித்தொகை பின்வருமாறு:-

வருண் தேச் – 3 லட்சம்

கல்யாண் ராம் – 5 லட்சம்

மகேஸ் பாபு – 10 லட்சம்

அல்லு அர்ஜீன் – 25 லட்சம்

ரவி தேஜா – 5 லட்சம்

ஜெ.ஆர் என்.டி.ஆர்– 10 லட்சம்

சாய் தரம் – 3 லட்சம்

பிரபாஸ் – 50 லட்சம்

இது மட்டுமல்லாமல் கர்னாடக அரசு தமிழக வெள்ள பாதிப்பிற்கு 5 கோடி நிதியுதவியும், பிரதமர் மோடி தமிழகத்திற்கு நிவாரண நிதியாக 1000 கோடி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.