முதன்முறையாக அஜித்துக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!

முதன்முறையாக அஜித்துக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!

73

Kajal Agarwal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் காஜல் இதுவரை அஜித்துக்கு மட்டும் ஜோடியாக நடித்ததில்லை. இந்த நிலையில் தற்போது தல 57 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக அனுஷ்காவை ஏற்கனவே படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது காஜல் அகர்வாலும் நாயகிகள் பட்டியலில் இணைந்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளனர். விரைவில் படத்தின் ஹீரோயின்கள் யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

NO COMMENTS

LEAVE A REPLY