Home Tamil Cinema News மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

150

Vedhalam-Movie

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வருடம் நவம்பர் 10ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் வேதாளம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. படத்தை அஜித் ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வந்தனர்.

வெதாளம் படம் வெளியாகி 25, 50, 75 நாட்கள் அனைத்தும் கடந்து இன்றோடு 100வது நாளை தொட்டிருக்கிறது. இதனால் இரட்டிப்பு சந்தோஷமான ரசிகர்கள் 100DaysOfATBBVEDALAM என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். சில இடங்களில் 100வது நாள் பேனர் கூட வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here