Home Tamil Cinema News ‘தளபதி தற்போது வேற லெவல்’ – கேப்டன் பாராட்டு

‘தளபதி தற்போது வேற லெவல்’ – கேப்டன் பாராட்டு

19

தமிழ் சினிமாவில் எல்லோராலும் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் எந்த அளவிற்கு உச்சத்தை தொட்டாரோ அதேபோல் அரசியலிலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி வரை உயர்ந்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் நீண்ட நாட்களாக கொஞ்சம் ஓய்வில் இருக்க, தற்போது பல பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகின்றார்.

இதில் உங்களுடன் நடித்த விஜய் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என கேட்ட போது ‘விஜய்யின் லெவலே தற்போது வேறு, நல்ல இடத்திற்கு சென்றுள்ளார்’ என கூறியுள்ளார்.

மேலும், தன்னை பற்றி வரும் மீம்ஸ் குறித்து கேட்கையில் ‘அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவே மாட்டேன்’ என்று பதில் அளித்துள்ளார்.