Home Tamil Movie Reviews தங்கமகன் – விமர்சனம்

தங்கமகன் – விமர்சனம்

1080
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

தனுஷ், ஆர்.வேல்ராஜ் கூட்டணி ஏற்கனவே “வேலையில்லா பட்டதாரி” எனும் வெற்றிப் படத்தை கொடுத்திருக்கிறது. மீண்டும் "தங்கமகன்" வெற்றிப்படமாக அமைந்திருப்பது இந்தக்கூட்டணிக்கு பெரிய பலத்தை கொடுத்திக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

மொத்தத்தில் தங்கமகன் - தங்கமான மகன் தான்.

3.5
இயக்கம்: ஆர்.வேல்ராஜ்
ஒளிப்பதிவு: ஏ.குமரன்
எடிட்டிங் எம்.வி. ராஜேஷ் குமார்
இசை: அனிருத் ரவிச்சந்திரன்
தயாரிப்பு: வுண்டர் பார் பிலிம்ஸும், அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ்
நடிகர்கள்: தனுஷ், சமந்தா, எமி ஜேக்ஷ்ன், சதிஷ், கே.எஸ் ரவிகுமார், ராதிகா

தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் ‘தங்க மகன்’ திரைப்படத்தில், தனுஷ் ஆக்ஷன் அவதாரம் தவிர்த்து, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்ப கதையில் நடித்திருக்கிறார், காமெடி கலந்த காதல் கதையாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படம் வெளிவந்துள்ளது.

thanga magan 1

தமிழ் எனும் பாத்திரத்தில் தமிழ்மகனாக, தங்கமகனாக வழக்கம் போலவே ஜொலித்திருக்கிறார் தனுஷ். அப்பா, அம்மாவுக்கு அடங்கிய அமைதியான குடும்ப பையனாகவும், கோவில், தெரு என்று ஒரு இடம் விடாமல் எமியை சுற்றும் வாலிபனாகவும் பீர் வாங்கி கொடுத்து பின்னாலேயே சுற்றி எமியின் காதலைப் பெறும் அற்புதமான காதலராகவும் தனுஷ் ரசிக்கவைத்திருக்கிறார்.

கணவராக சமந்தாவுடன் ஒரு நிஜ குடும்பத்தை அழகாக காட்டி சொல்லுமளவிற்கு வெளுத்து வாங்கியிருக்கிறார். சமந்தாவுடன் ரொமேன்ஸ் காட்சிகளில் நம்மையும் சிலிர்க்கவைத்திருக்கிறார்.

Thanga-Magan-hero

இளம் வாழிபனாக எம்.ஜி.ஆர். ஸ்டைலில் எமியிடம் காதலை சொல்லப் போவதும், அப்பா பற்றி விவரம் தெரியாததால் வருத்தத்தில் குடித்துவிட்டு வந்து மனைவி சமந்தாவிடமும், அம்மா ராதிகாவிடமும் உருகுவதும் பிரமாதம்.

தனுஷின் காதலியாக எமி ஜாக்ஸனும், மனம் கவர்ந்த மனைவியாக சமந்தாவும் என்னமாய் நடித்திருக்கிறார்கள். தனுஷை உன் பேரு தமிழ் உங்க அப்பா பேரு இங்கிலீஷா? எனக் கேட்டு கலாய்ப்பது. உள்ளிட்டவைகளில் எமி பளிச் என்றால் சமந்தாவும் குடும்ப பெண்ணாக கணவர் தனுஷுடன் அன்பில் திழைத்து ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளார்.

thangamagan

இன்கம்டாக்ஸ் ஆபிஸில் வேலை பார்க்கும் மறதி மன்னனான அப்பா கே.எஸ். ரவிக்குமாரை காணாமல் தவிக்கும் மகன் தனுஷின் எமியுடனான காதல் பிளாஷ்பேக்கும், மனைவி சமந்தாவுடனான குடும்பகுதூகலமும் தான் தங்கமகன் மொத்த படமும். தனுஷ், அப்பாவை தேடிக் கண்டு பிடித்தாரா? எமியின் காதல் என்னவாயிற்று? சமந்தா தனுஷின் சம்சாரம் ஆனது எப்படி? என்பது உள்ளிட்ட வினாக்களுக்கு வித்தியாசமாக விடை அளிக்கிறது தங்கமகன்.

நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தனுஷின் அப்பாவாக, கே.எஸ். ரவிக்குமாரும், அம்மாவாக ராதிகா சரத்குமாரும் கூட பாசம் மிகுந்த பெற்றோராக பொௗந்து கட்டியிருக்கின்றனர்.

thanga-magan

தனுஷயே கலாய்த்து படத்தை சுவாரஸ்யப் படுத்துகிறார் சதீஷ், தனுஷின் அத்தை சீதா, அத்தை மகன் அரவிந்த் ஜெயபிரகாஷ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

அனிருத்தின் இசை அபாரம். உயிரே, உயிரே… பாடலில் அனைவரையும் உருக வைத்திருக்கிறார். ஏ.குமரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய ப்ளஸ், எம்.வி. ராஜேஷ் குமாரின் படத்தொகுப்பு அபாரம் என்றே சொல்லலாம்.

thanga-magan 2

தனுஷ், ஆர்.வேல்ராஜ் கூட்டணி ஏற்கனவே “வேலையில்லா பட்டதாரி” எனும் வெற்றிப் படத்தை கொடுத்திருக்கிறது. இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைந்திருப்பது இந்தக்கூட்டணிக்கு பெரிய பலத்தை கொடுத்திக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

மொத்தத்தில் தங்கமகன் – தங்கமான மகன் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here