Home Tamil Cinema News தனி ஒருவன் படத்தின் 2ம் பாகம் கதை தயார் – ஜெயம் ரவி

தனி ஒருவன் படத்தின் 2ம் பாகம் கதை தயார் – ஜெயம் ரவி

113

M Raja, Jayam Ravi @ Thani Oruvan Movie Shooting Spot Stills

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தனி ஒருவன். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார், இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில், ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா, எப்படி இருக்கும் என்ற கேள்விகள் குறித்து நடிகர் ஜெயம் ரவி பேட்டியளித்துள்ளார். அதில் ‘தனிஒருவன்’ 2வது பாகத்துக்கான கதைக் கருவை அண்ணன் தயார் செய்து விட்டார். இதனை என்னிடம் கூறிய போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நாம் மீண்டும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கப்போகிறோம் என்றார்.

நான் என் அண்ணனிடம் எப்போது வேண்டுமோ கதை விவாதத்தின் போது கூட என்னை கூப்பிடு நான் வந்துவிடுகிறேன் என்றேன். ஏனென்றால் எங்க அண்ணன் படத்தில் ஓர் உதவி இயக்குநராகவும் இருக்க ஆசைப்படுவதாக ஜெயம் ரவி தெரிவித்து உள்ளார்.