Home Tamil Movie Reviews தாரை தப்பட்டை – விமர்சனம்

தாரை தப்பட்டை – விமர்சனம்

488
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

இளையராஜாவின் பாடல்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்றார் போல் மீண்டும் தனது கிராமத்து இசையால் வசியப்படுத்துகிறார் பாடல்களிலும், பின்னணி இசையிலும் இசைஞானி இளையராஜா.

மொத்தத்தில் தாரை தப்பட்டை - அழுத்தம் நிறைந்த பெரியவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படம்.

2.7
இயக்கம்: பாலா
ஒளிப்பதிவு: செழியன்
இசை: இளையராஜா
தயாரிப்பு: B ஸ்டியொ, சசிகுமார், பாலா
நடிகர்கள்: சசிகுமார், வரலக்ஷ்மி, ஆர்.கே.சுரேஷ்

பரதேசி படத்துக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு பொங்கல் விருந்தாக ரிலீசாகியிருக்கும் படம் தாரை தப்பட்டை. பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே ‘தாரை தப்பட்டை’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

hqdefault

தஞ்சாவூரில் கரகாட்டக் குழுவை நடத்தி வருபவர் சன்னாசி எனும் சசிகுமார், அக்குழுவில் சூறாவளி எனும் முன்னிலை கரகாட்டக்காரியாக வரலக்ஷ்மி. சசிகுமாரை தன் உயிருக்கும் மேலாக காதலிக்கிறார், அதை வெளிப்படையாக சொல்லாமலே சுற்றி வருகிறார்.

இந்நிலையில் கலெக்டரிடம் டிரைவராக வேலை பார்ப்பதாகக் கூறும் ஆர்.கே.சுரேஷ் வரலட்சுமியை 6 மாத காலமாக காதலிப்பதாகக்கூறி, அவரின் அம்மாவிடம் வந்து பெண் கேட்கிறார். தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென நினைத்து, சசிகுமாரை விட்டுக்கொடுக்கச் சொல்லி அவரிடம் மன்றாடுகிறார் வரலட்சுமியின் அம்மா.

tharai 600 a(1)

வேறு வழியில்லாமல் சசிகுமாரும் வரலட்சுமியை வெறுப்பதுபோல் விரட்டியடித்து, ஆர்.கே.சுரேஷை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வரலட்சுமியிடம் சத்தியமும் வாங்குகிறார்.

வரலட்சுமிக்கும், ஆர்.கே.சுரேஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இருவரையுமே எங்கு தேடியும் கிடைக்காததால், சசிகுமாரிடம் வந்து விஷயத்தை சொல்கிறார் வரலட்சுமியின் அம்மா. வரலட்சுமிக்கு என்ன ஆனது? உண்மையில் ஆர்.கே சுரேஷ் யார்? சசிகுமார் என்ன செய்தார் என்பதை தனது வழக்கமான பாணியில் சொல்லி முடித்திருக்கிறார் பாலா.

10CP_tharaithapata_2689783g

கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் குறித்த நிலையை சொல்லும் திரைக்கதை வழக்கமான பாலா படமாக ஒரு கட்டத்தில் மாறும்போது தடுமாற்றமும், தடம் மாற்றமும் நிகழ்கிறது.

உணர்வுகளை உருக்கமும் நெருக்கமுமாகக் காட்டிய பாலா அதற்கடுத்த காட்சிகளில் வேறு திசையில் பயணிக்க வைக்கிறார். அது படத்துக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இது டெம்ப்ளேட் தானே. இன்னும் ஏன் இதை பாலா விடாமல் வைத்துக்கொண்டு அடம்பிடிக்கிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை.

இளையராஜாவின் இசையும், செழியனின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பெரும் பலம். படத்தின் வீரியம் மிக்க இடங்களில் இளையராஜா தன் இசையை நிரப்பி சரி செய்ய முயற்சித்ததை சொல்லியே ஆக வேண்டும். சில இடங்களில் லாஜிக் மிஸ் ஆவதை மறுப்பதற்கில்லை.

பாலாவின் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு, கொடூரமான வன்முறைக் காட்சிகளை பாலா படமாக்கும் விதம் மென்மேலும் கோரமாக உருவெடுத்து வருகிறது என்றுதான் தோன்றும்.

01-1451642062-tharai-thappattai7678

வில்லனாக அறிமுகமாகியிருக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் இந்தப்படத்தில் நல்ல ஸ்கோப் கிடைத்திருக்கிறது. அவரும் அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

செழியனின் ஒளிப்பதிவில் தஞ்சாவூரின் மண் வாசனையை ஸ்கிரீனில் மிக அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

இளையராஜாவின் பாடல்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்றார் போல் மீண்டும் தனது கிராமத்து இசையால் வசியப்படுத்துகிறார் பாடல்களிலும், பின்னணி இசையிலும் இசைஞானி இளையராஜா.

மொத்தத்தில் தாரை தப்பட்டை – அழுத்தம் நிறைந்த பெரியவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here