Home Tamil Breaking News அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் இன்று..மு.க.ஸ்டாலின் மரியாதை..

அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் இன்று..மு.க.ஸ்டாலின் மரியாதை..

25

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திரு உருவச்சிலைக்கு டிடிவி தினகரன் இன்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகளும், கழக நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி உட்பட பலரும் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts