Home World News இலக்கியதுக்கான நோபல் பரிசு வென்ற பிரிட்டன் எழுத்தாளர்..

இலக்கியதுக்கான நோபல் பரிசு வென்ற பிரிட்டன் எழுத்தாளர்..

22

ஸ்டாக்ஹோம்: பிரிட்டனைச் சேர்ந்த கசுவா இசிகுரோவுக்கு இந்தாண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் பெரியளவில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர்.
நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் தலைமையிலான குழுவால், இதுவரை மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நோபல் பரிசு பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் கசுவா இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜப்பானின் நாகசாகி நகரில் பிறந்து குழந்தையாக இருந்தபோதே பிரிட்டனில் குடியேறியவர்.
இவரது முதல் நாவல் ‘ஏ பேல் வியூ ஆப் ஹில்ஸ்’ 1982ம் ஆண்டில் வெளிவந்தது. ‘அன் ஆர்டிஸ்ட் ஆப் தி புளோட்டிங் வேர்ல்டு’ என்ற நாவல் இவருக்கு பெருமையை பெற்றுத் தந்தது. இதேபோல் ‘தி ரிமைன்ஸ் ஆப் தி டே’ நாவல் இவரது பெருமையை உலகறியச் செய்தது. இவர் எட்டு நாவல்களையும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு கதை எழுதியுள்ளார். நோபல் பரிசு வென்ற கசுவாவுக்கு 7 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.