Home Tamil Breaking News சபரிமலையில் பெண்களின் அனுமதி : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

சபரிமலையில் பெண்களின் அனுமதி : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

20

புதுடெல்லி : கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று முக்கிய தீர்ப்பு அளிக்க உள்ளது. மேலும் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து நீதிபதிகள் அறிவிக்க உள்ளனர்.

 

Related Posts