Home Tamil Cinema News யுவனின் இசையை கேட்டு மனம் நெகிழ்ந்த இயக்குனர்

யுவனின் இசையை கேட்டு மனம் நெகிழ்ந்த இயக்குனர்

111

Yuvan-Shankar-Raja

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையமைத்த பல படங்கள் வெற்றிப் படமாகவே அமைந்தன. இவர் தற்போது புதுப் படங்களில் ஒப்பந்தம் ஆகமுடியாத அளவுக்கு அரை டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

யுவன் தற்போது இசையமைத்துவரும் படம் தர்மதுரை. இப்படத்தின் இயக்குனர் சீனுராமசாமி அவர் சந்தித்து சமீபத்தில் யுவனிடம் டியுன் கேட்டுள்ளார். அப்படத்திற்கான அனைத்து பாடல்களையும் யுவன் சில நாட்களிலேயே அளித்து விட்டாராம்.

அவர் அனுப்பிய பாடல்களை கேட்ட சீனுராமசாமி ‘தர்மதுரை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தந்திருக்கும் பாடல்களை கேட்டுப்பார்த்து மயங்கினேன், அடுத்த இசைஞானி யுவன் என்றது என் மனம்’ என்று கூறியுள்ளார்.