Home Tamil Breaking News விமான நிலையங்களில் பயோ மெட்ரிக் முறை: மத்திய அரசு திட்டம்

விமான நிலையங்களில் பயோ மெட்ரிக் முறை: மத்திய அரசு திட்டம்

57

டெல்லி: நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களின் உள்நாட்டு முனையத்திலும் பயோ மெட்ரிக் பதிவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பயோ மெட்ரிக் பதிவு மூலம் உள்நாட்டு முனையத்திற்கு வரும் விமான பயணிகளை விமானத்துக்குள் அனுமதிக்கும் முறையை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் தகவல்களுடன், பயணிகளின் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் எண்களை இணைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜி யாத்திரா என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான செலவு மற்றும் அமல்படுத்தும் காலம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

இத்திட்டம் குறித்து தகவல் தெரிவித்துள்ள விமான போக்குவரத்து செயலர் சவுபே , பயணிகள், விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்குள் நுழையும் முன் பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை உறுதிபடுத்தி கொள்ள வசதி ஏற்படுத்தப்படும் என்றார். இதற்காக விமான டிக்கெட்டோ, அடையாள அட்டைகளோ தேவையில்லை. மாறாக விமான நிறுவனத்தின் குறிப்பிடப்படும் தகவல்கள் மூலம், பயணிகள் முன்பதிவு செய்த தகவல்கள் உட்பட முக்கிய தகவல்களை அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் என்றார். மின்னணு முறையில் தான் பயணிகள் அனைத்து சோதனைகளையும் கடந்து வந்துள்ளாரா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here