Home Tamil Breaking News கவர்னர் இன்று தமிழகம் வந்தார்..சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை..

கவர்னர் இன்று தமிழகம் வந்தார்..சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை..

17

சென்னை: தமிழக கவர்னர் இன்று சென்னை வந்தார். தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கவர்னர் வருகை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று (செப்.,18) சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மும்பையில் இருந்து டில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்தார். தமிழக அரசியல் சூழல் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதித்தனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை அதிரடியாக தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கவர்னர் இன்று தமிழகம் வந்தார். இவர் இன்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்கவுள்ளார்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.