Home Tamil Breaking News 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

20

18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரப்பூர்வமாக தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூ பிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதன்படி 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் சல்மான் குர்ஷித் ,துஷ்யந்த் தவே, சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள். இருதரப்பு சார்பிலும் வாதம் நடைபெற்றது.

பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய வழக்கில் திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல்வாதிட்டார். இந்த வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவைச்செயலாளர், முதலமைச்சர்,அரசு கொறடா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.