Home Tamil Cinema News மெர்சலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

மெர்சலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

17

மெர்சல் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்ஙகை விசாரித்த நீதிபதிகள் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கேள்வி கேட்டுள்ளனர்.

மெர்சல் என்பது படம் தான், அது நிஜவாழ்க்கை ஒன்றும் அல்ல, அப்படியே பொதுநலனோடு வழக்கு தொடர்ந்திருந்தால் குடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம், அதுமட்டுமின்றி மெர்சலில் மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கலாமே.

கருத்து சொல்வது அவரவரின் உரிமை, சுதந்திரம். கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்குமானது, தனிப்பட்ட ஒருவருக்கு படம் பிடிக்கவில்லையெனில் படத்தை பார்ப்பதை தவிருங்கள். இதற்காக ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள் என்று கேட்ட நீதிபதிகள், மெர்சல் படத்தை எதிர்ப்பதில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.