Home Tamil Cinema News இந்திய படங்களிளை ஓரங்கட்டிய ‘தி ஜங்கிள் புக்’

இந்திய படங்களிளை ஓரங்கட்டிய ‘தி ஜங்கிள் புக்’

90

jungle-book-baloo

உலகமெங்கும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. உலகளவில் தற்போது வரை அரை பில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ள இந்த ப்படம், இந்தியாவில் மட்டும் இதுவரை 144 கோடிகளை வசூல் செய்துள்ளது.

மேலும், 2016ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்துள்ள படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது தி ஜங்கிள் புக். அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஏர் லிப்ட்’ திரைப்படம் 127 கோடி ரூபாயும், ஷாருக்கான் நடிப்பில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘ஃபேன்’ படம் இதுவரை 80 கோடி ரூபாயையும் வசூல் செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களும் 2016ஆம் ஆண்டு, இந்தியாவில் அதிகம் வசூல் செய்துள்ள மற்ற 2 படங்களாகும். இப்போதும் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் மேலும் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here