Home World News ஒரு டீவீட்டில் அனுமதிக்கப்படும் எழுத்துக்களின் எண்ணிக்கையை இரு மடங்காக்கும் சோதனை முயற்சி

ஒரு டீவீட்டில் அனுமதிக்கப்படும் எழுத்துக்களின் எண்ணிக்கையை இரு மடங்காக்கும் சோதனை முயற்சி

64
SHARE

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், அதன் பயன்பாட்டாளர்கள் தங்களது “கருத்துகளை எளிதாக வெளிப்படுத்தும்” வகையில் ஏற்கனவே ஒரு பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கி சோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது.

ட்விட்டரில் ஏற்கெனவே கருத்து பதிவிடும் எழுத்துக்களின் உச்ச வரம்பான 140ஐ, இரண்டு மடங்காக, அதாவது 280 எழுத்துக்களாக அதிகரித்து சில பயனாளர்களிடையே சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. தற்போது ட்விட்டர் அளித்து வரும் உச்ச வரம்பு, சில பயனாளர்களுக்கு “அதிகபட்ச ஏமாற்றத்தை” அளிப்பதாக தனது சமீபத்திய வலைப் பதிவொன்றில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here