Home World News மெக்சிக்கோ கடல் பகுதியில் அதிபயங்கர நிலநடுக்கம்..சுனாமி எச்சரிக்கை..

மெக்சிக்கோ கடல் பகுதியில் அதிபயங்கர நிலநடுக்கம்..சுனாமி எச்சரிக்கை..

22

மெக்சிகோவில் 8.0 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், இன்னும் சில மணிநேரத்தில் அந்த நாட்டை ஆழிப்பேரலை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிஜிஜியப்பான் ((bijijiapan)) நகருக்கு தென் மேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு, கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால், மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ நகர் உள்ளிட்ட நகரங்கள் குலுங்கின. குடியிருப்புகள் அனைத்தும் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகள் மற்றும் தெருக்களில் ஓடினர். நிலநடுக்க பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

வெகுநேரம் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இந்த வகை நிலநடுக்கங்கள் மிகவும் ஆபத்தானவை என்றும் அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மெக்சிகோ, குவட்டெமலா, பனாமா, கோஸ்டா ரீக்கா, ஹோண்டுரஸ், ஈகுவேடர் ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.