Home Health நம் சங்ககால இலக்கிய மருந்து..!! இதை வீட்டிற்கு வெளியே வைத்தால் மட்டும் போதும்..!! ‘டெங்கு’வை ஓட...

நம் சங்ககால இலக்கிய மருந்து..!! இதை வீட்டிற்கு வெளியே வைத்தால் மட்டும் போதும்..!! ‘டெங்கு’வை ஓட ஓட விரட்டலாம்…

82
SHARE

தற்போது பரவும் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு சிறந்த வழி உண்டு, கொசு மருந்து கொசுவை விரட்டுவதில்லை மாறாக தீங்கை விளைவிக்கிறது அதை விடுத்து நாம் இயற்கைக்கு திரும்புவோமாக.

அதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ கேளுங்கள் நண்பர்களே நொச்சி என்னும் தாவரம் நம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது,

அது புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது.

இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை என முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர்.

இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும். நொச்சி செடியில் உள்ள வேதிப்பொருட்கள்… நுண் பூச்சிகளான ஈ, கொசு போன்றவைகளை அருகில் அண்டவிடாமல் தடுக்கும் தன்மை உடையது.

மேலும் நொச்சி செடியில் இருந்து வரும் வாசனையானது கொசுவின் இனப்பெருக்கத்தைத் தடை செய்யக்கூடியது.

இச்செடியின் வேரில் உள்ள வேதிப்பொருள் மூலம் மண் வளமும் பாதுகாக்கப்படும். காய்ந்த நொச்சி இலைகளை எரித்தால், அந்தப் புகைக்கு கொசு வராது என்று சொல்வார்கள்.

வீட்டிற்கு ஒரு நொச்சி செடி வளர்த்தாலே போதுமானது உறவுகளே. செடி வளர்ப்போம் கொசுவை ஒழிப்போம். மண் காப்போம் தமிழ் பாண்பாட்டை மீட்டேடுப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here