Home World News இந்திய எல்லை கிராமங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்

இந்திய எல்லை கிராமங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்

20

ஸ்ரீநகர்: இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த 12 மணி நேரங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய மூன்றாவது சம்பவம் இதுவாகும். உளவுத்துறை அதிகாரி பேசுகையில், “இன்று காலை 5:30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தானியங்கி ஆயுதங்களை கொண்டு தாக்குதலை தொடங்கியது, இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது,” என்றார். பூஞ்ச் மாவட்டம் தெவ்வார், குல்பூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

தெக்வார் பகுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள திக்வார், ஷாபூர், காஸ்பா, கெர்னி, மந்தார் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 6.30 மணி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
முக்கியமாக எல்லைப் பகுதியில் வசித்து வரும் கிராமக்களை குறிவைத்து ராக்கெட் குண்டுகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக வீசினர். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 சிறார்கள் பலியாகினர். மேலும் 5 சிறார்கள் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது.