Home Tamil Sports News ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம்..!

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம்..!

22

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் இந்திய அணிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், மலேசியா மற்றும் இந்தியா அணிகள் களமிறங்கின. 

கடுமையாகப் போராடிய மலேசிய அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆட்ட நேர முடிவில், இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2003 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, 3-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.