Home World News சீனாவில் கொண்டாடும் பௌர்ணமி கால திருவிழா!

சீனாவில் கொண்டாடும் பௌர்ணமி கால திருவிழா!

21

நடு இலையுதிர் கால திருவிழா அல்லது இடை-இலையுதிர்கால கொண்டாட்டம் என்பது சீனர் மற்றும் வியட்நாமியராலும் கொண்டாடப்படும் ஒரு அறுவடைக்கால விழாவாகும்.

சீன மக்களின் கொண்டாட்டங்களில் முதன்மை இடத்தைப் வகிப்பது வசந்தவிழா ஆகும். அதனை அடுத்து வரும் மகத்தான ஒரு கொண்டாட்டமாக விளங்குவது இந்த இடைஇலையுதிர்கால கொண்டாட்டமாகும். அருமையான சிதோசன நிலை காணப்படும் இம்மகத்தான கொண்டாட்டம்; சந்திரன் இந்த நாள் வட்ட வடிவமாக காணப்படுவதால் சந்திர விழா எனவும் போற்றிக் கொண்டாடுவர். பூரண சந்திரன் அமைதிக்கும் சௌபாகியத்திற்கும் குடும்பங்கள் மீளச் சந்திப்பதற்குமான அடையாளமெனவும் சீன மக்கள் நம்புகின்றனர்.

இதனை முன்னிட்டு சீனாவின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் படம் பிடிக்கப்பட்ட முழு நிலா காட்சிகள் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளன. கண்களுக்கு கொள்ளை அழகை வாரியிறைக்கும் இந்த அழகான காட்சிகள்.

வான் நிலாவின் பேரழகு பல நூற்றாண்டுகளைக் கடந்தும் ரசிக்கக்கூடியதாக இருப்பதாக சீன மக்கள் கூறுகின்றனர். முழு நிலா காட்சி பிரிந்து சென்ற குடும்பத்தினர் இணைந்ததன் குறியீடு என்றும் சீன மக்கள் கருதுகின்றனர்.