Home Tamil Cinema News தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின் புகைபடங்கள் வெளியீடு: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின் புகைபடங்கள் வெளியீடு: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

30

‘தமிழ் ராக்கர்ஸ் – தமிழ் கன்’ நெறியாளர்கள் குறித்து தகவல் அளித்தால் பரிசளிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

திருட்டு விசிடியை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இணையம் வழியே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரண்டு இணையங்கள்தான், வெளியான அன்றே முழுப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அவர்களை கண்டுபிடிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். தற்போது அந்த இணையங்களின் நெறியாளர்கள் புகைப்படத்தை வெளியிட்டு, இவர்களை பற்றிய தகவல்கள் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனால் இரண்டு நெறியாளர்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பல்வேறு தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here