Home Tamil Breaking News ரயில்களின் வேகத்தைக்கூட்டி, பயண நேரத்தை குறைக்கும் நடவடிக்கை..

ரயில்களின் வேகத்தைக்கூட்டி, பயண நேரத்தை குறைக்கும் நடவடிக்கை..

65
SHARE

புதுடெல்லி : பிரபல ரெயில்களின் பயண நேரம் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை குறைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு போபால்–ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 95 நிமிடம் முன்னதாக போய்ச் சேரும்.

ரெயில்களின் வேகத்தைக்கூட்டி, பயண நேரத்தை குறைக்கிற வகையில் புதிய ரெயில்வே கால அட்டவணை தயாராகி வருகிறது. இந்த கால அட்டவணையில் ஒவ்வொரு ரெயில்வே டிவிசனுக்கும் பராமரிப்பு பணிக்காக 2 முதல் 4 மணி நேரம் ஒதுக்கப்படும்.

50 மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள், ‘சூப்பர் பாஸ்ட்’ என்னும் அதிவேக ரெயில்களாக மாற்றப்படுகின்றன.

அடுத்த மாதம் முதல் 500 தொலைவிட ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், அவற்றின் பயண நேரத்தை 2 மணி நேரம் வரை குறைக்கவும் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here