Home Tamil Cinema News தெறி பாடல் வரியை வெளியிட்ட படக்குழு

தெறி பாடல் வரியை வெளியிட்ட படக்குழு

316

Theri-Movie-Still

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து பல சாதனைகளை முறியடித்தது அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவருகிறது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது இவரது 50வது படமாகும். இதனால் இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்குகாக கடுமையாக உழைத்து வருகிறேன் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் பாடல் வரிகளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார். “ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி.. தொப்பியில சிங்கத்த பாரேன், தோளுல ஸ்டார வாங்கும் போலீசு காரன்… என்ற பாடல் வரிகளை வெளியிட்டிருக்கிறார். மேலும் இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here