Home Tamil Movie Reviews தெறி – விமர்சனம்

தெறி – விமர்சனம்

880
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

இளைய தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது தெறி. இயக்குனர் அட்லீ, ராஜா ராணி பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய்யுடன் கைகோர்த்துள்ள படம் என்பதே இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு விண்ணை தொட்டுள்ளது. ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளிவந்திருக்கும் 50-வது படமும் கூட ” தெறி” என்பது மேலும் சிறப்பு.

3
இயக்கம்: அட்லீ
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
இசை: ஜிவி பிரகாஷ்குமார்
தயாரிப்பு: கலைப்புலி எஸ் தாணு
நடிகர்கள்: விஜய், சமந்தா, எமி ஜாக்ஸன், மகேந்திரன், ராஜேந்திரன், பேபி நைனிகா, ராதிகா, பிரபு

 

இளைய தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது தெறி. இயக்குனர் அட்லீ, ராஜா ராணி பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய்யுடன் கைகோர்த்துள்ள படம் என்பதே இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு விண்ணை தொட்டுள்ளது. ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளிவந்திருக்கும் 50-வது படமும் கூட ” தெறி” என்பது மேலும் சிறப்பு.

a

கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு விஜய் மீது ஒருதலைக் காதல்.

அமைதியாக செல்லும் இவர் வாழ்க்கையில் உள்ளூர் ரவுடிகளால் தன் மகளுக்கு பிரச்சனை வர விஜய், அடித்து துவம்சம் செய்கிறார். பின் இத்தனை அமைதியாக இருக்கும் உங்களுக்குள் எப்படி இந்த மிருககுணம் என எமி கேட்க, பழைய பாணியில் விரிகிறது ப்ளாஷ்பேக்.

theri 2

ஊருக்குள் யார் தப்பு செய்தாலும் தட்டிகேட்கும் நேர்மையான போலிஸ் அதிகாரியாக விஜய குமார், ஐடியில் பணிபுரியும் ஒரு ஏழை குடும்பத்தை சார்ந்த பெண் கற்பழிக்கப்படுவதை அறிகிறார். அவர் யார் என்பதை கண்டிப்பிடித்து அவனை நடு பாலத்தில் கொன்று தொங்க விட, அந்த இறந்தவரின் அப்பா எம் எல் ஏ மகேந்திரன்.

பின் அவர் விஜய் குடும்பத்தையே கொல்ல, உயிரை கையில் பிடித்துக்கொண்டு விஜய் கேரளா செல்கிறார். ஆனால், இவர் உயிரோடு இருப்பதை அறிந்த மகேந்திரன் மீண்டும் விஜய்யை துரத்த, இனி அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது என விஜய் ஆடும் வண்முறை தெறியாட்டமே மீதிக்கதை.
Theri-at-the-verge-of-completionவிஜய், விஜயக்குமார் ஐ.பி.எஸ், ஜோஸப் குருவில்லா, தர்மேஷ்வர் ஆகிய மூன்று வித கெட்அப்களிலும், கேரக்டர்களிலும் வழக்கம் போலவே தன் பாணியில் வாழ்ந்திருக்கிறார். மிடுக்கான போலீஸ் ஆபிஸராக, மலையாளி ஜோஸப் குருவில்லாவாக, தர்மேஷ்வராக, முப்பரிமாணங்களிலும் விஜய், வித்தியாசம். அதிலும், அப்பா, மகள் செண்டிமெண்ட் காட்சிகளில் சொல்லவே தேவை இல்லை. மிரட்டியிருக்கிறார்கள் விஜய்யும், அவரது ஆசை மகளாக வரும் நைனிகாவும்!

இரு நாயகிகளில் முதல் நாயகி சமந்தா, விஜய் ஜோடியாக டாக்டராக கச்சிதம். அவரது காஸ்ட்யூம்கள் அவரை விட கனகச்சிதம். விஜய்யிடம் எனக்கு இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தை ஒன்னுதான் என சமந்தா சொல்ல, அது சாரி தானே? என்று விஜய் கேட்க, இல்ல, போலீஸ் எனும் இடத்தில் சமந்தா ரசனை. இது மாதிரி படம் முழுக்க பல இடங்களிலும் ரசிகனை மயக்கும் குறும்பு வாசனை.

14-1460638199-theri-d-d-600

இப்படி, சமந்தா விஜய் மனதை கொள்ளை கொள்கிறார் என்றால், நைனிகாவின் டீச்சராக மலையாளி பெண்குட்டியாக வரும் எமி ஜாக்ஸன், மெச்சூரிட்டியான ரோலில் ரசிகனை கொள்ளை கொள்கிறார்.

விஜய் வரும் அத்தனைக் காட்சிகளுமே ‘தெறி’ என்று சொல்லும்படிதான் இருக்கிறது. குறிப்பாக, வகுப்பறைக்குள் ரவுடிகளுக்குப் பாடம் சொல்லித் தரும் விதம், மாமனாரிடம் பெண் கேட்கும் காட்சி, அருமை! அதேநேரம், சிக்லெட்டை வாயில் போடும் காட்சி, கண்ணாடியை இந்தக் கையிலிருந்து அந்தக் கைக்கு மாற்றும் ஸ்டைலெல்லாம் ஏற்கெனவே அட்லி வேலைப் பார்த்த சிவாஜியில் இடம்பெற்றவை. ஆதலால் அதனை தவிர்க்கலாம்!

14-1460638217-theri4554

பிரதான வில்லன் மகேந்திரனின் பாத்திரப் படைப்பில் சுவாரஷ்யம் இல்லை. என்னப்பா உங்கிட்ட இன்னும் எதிர்ப்பார்த்தேன். சப்பையா முடிச்சிட்டியே’ என ஒரு காட்சியில் மகேந்திரன் பேசுவார். அந்த வசனம் அட்லிக்காகத்தான் போலிருக்கிறது. அவரது உடல் மொழியை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த வைத்திருக்கலாம். க்ளைமாக்ஸில் அவரை பரிதாபமாக உட்கார வைத்துவிடுகிறார். இந்த வயசான கிழவனை எப்படி நம்ம ஹீரோ அடிக்கப் போகிறாரோ என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.

இரண்டு நாயகிகள். சமந்தா அழகான மனைவியாக வந்து ஒரு குழந்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, ஒரு நாள் இரவு, ஒரு மனைவியா என்னை நீங்க எப்படிப் பார்க்குறீங்க? என்று கேட்கும்போதே, அடுத்த சீனில் அவர் கொல்லப்படுவார் என்பது புரிந்துவிடுகிறது.

எமி ஜாக்ஸன் தான் எதற்கு என்றே தெரியவில்லை, ப்ளாஷ்பேக் கேட்பதற்காவே படத்தில் வந்து செல்கிறார். இவை அனைத்தையும் விட படத்தில் நம்மை மிகவும் கவருவது நைனிகா குட்டி தான்.. இன்னும் பல வருடங்களுக்கு கால்ஷிட் புல் தான். அத்தனை அழகாக சின்ன வயதில் விஜய்க்கே கவுண்டர் கொடுத்து நடித்திருக்கிறார்.

amy-jackson

பிரபு, ராதிகா, அழகம்பெருமாள், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட மற்ற கேரக்டர்களும் கச்சிதம். அதிலும், செம சிரிப்பு மூட்டும் வெறும் கமெடியனாக மட்டுமில்லாமல் படத்தை இன்டர்வெல் வரை எமோஷனலாக இழுத்து செல்லும் ராஜேந்திரன் சுவாரஸ்யம்!

படத்தில் பல காட்சியமைப்புகள் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அட்லீ காட்சிப்படுத்தியுள்ளார். பாலியல் தொல்லை, குழந்தை தொழிலாளர், வட இந்திய வேலையாட்களை இங்கு நடத்தும் விதம் என பல சென்சிட்டிவ் விஷயங்களை மாஸ் மன்னன் விஜய் வாயிலாக கூறியுள்ளார்.

theri

தெறி படத்தின் தொடக்கத்தில் இருந்தே அதன் பாடல்களில் மிகவும் கவனம் செலுத்துகின்றேன், இளைய தளபதி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாது எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் படத்தின் பாடல்கள் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருந்த நம்ம ஜீ.வி பிடகாஷ், அதை செய்தும் காட்டி இருக்கின்றார். ‘செல்லக்குட்டி’, ‘ஜித்து ஜில்லாடி’ உள்ளிட்ட பாடல்கள் ஹிட்.

படத்தின் எடிட்டிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள், அதிலும் பஸ் ஏரியில் விழுந்த பிறகு விஜய் அந்த 100 அடி பாலத்தில் குதிக்கும் காட்சி பிரமிக்க வைக்கின்றது. ஜார்ஜ் C.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படக்காட்சிக்காகவும், பாடல் காட்சிகளுக்காகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் லொகேஷன்களும் மிக அருமை!

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் ரொம்பவே மெனக்கெட்டிருக்க வேண்டும் இயக்குநர். திடீரென பேய்ப் பட ஸ்டைலில் மூன்று காட்சிகள் அரங்கேறுகின்றன. அந்த பேய் வருவது போன்ற காட்சிகள் லாஜிக் மீறல்.

மொத்தத்தில் “தெறி” – பதுங்கிய புலியின் கொஞ்சம் அதீத தெறியாட்டம்.