Home Tamil Cinema News பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி சாதனை படைத்த தெறி டீசர்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி சாதனை படைத்த தெறி டீசர்

422

vijay-in-theri

இளைய தளபதி விஜய் நடிக்கும் தெறி படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடித்து வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நேற்று காலை முதலே தெறி டீசர் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் ஏகப்பட்ட போஸ்டர்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில், மாசாக வெளியாகியிருக்கும் தெறி படத்தின் டீசர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெறி டீசர் நேற்று எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் சரியாக 12.00AM மணிக்கு வந்தது. டீசர் வந்த சில நிமிடங்களிலேயே லைக்ஸ் குவிந்தது.

ஒரு மணி நேரத்தில் 56 ஆயிரம் கைக்ஸுகளை பெற்றது, இதன் மூலம் வேதாளம் சாதனையை முறியடித்தது மட்டுமில்லாமல் உலக அளவில் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளது.

மேலும், தற்போது வரை 1.2 லட்சம் லைக்ஸுகளை பெற்றது மட்டுமில்லாமல், 7 லட்சம் அளவிலான பார்வையாளர்களை தாண்டியுள்ளது.