Home Tamil Cinema News தெறி – யாருக்குத்தான் சொந்தம்!

தெறி – யாருக்குத்தான் சொந்தம்!

172

Vijay-and-Ajith

தமிழ்த் திரையுலகில் விஜய், அஜித்திற்கு தான் அதிக ரசிகர்கள். ஆனால், இதுவே இவர்கள் படத்திற்கு வில்லங்கமாக அமைந்து வருகின்றது. தெறி படத்தின் தலைப்பு அஜீத்தின் வேதாளம் படத்திலிருந்து சுடப்பட்டது என்கிற ரீதியில், அந்தத் தலைப்பு வெளியான நேற்றிலிருந்து எழுதி வருகின்றனர் சமூக வலைத் தளங்களில்.

ஒரு நடிகரின் படம் வந்தால் மற்ற நடிகர் ரசிகர்கள் கிண்டல் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ‘தெறிக்க விடலாமா’ என்ற வசனத்தை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்தது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது விஜய் படத்திற்கே தெறி என்று தலைப்பு வைத்துள்ளது, அஜித் ரசிகர்களுக்கு ஏதுவாக அமைய ‘இது தல சொன்னதுப்பா’ என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

சதீஷ்குமார் என்ற இளம் இயக்குனர் தனது படத்துக்கு தெறி என்ற பெயரை மூன்று மாதங்களுக்கு முன்பே கவுன்சிலில் பதிவு செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் அது குறித்து விளம்பரமும் செய்திருந்தார்.

செப்டம்பர் 11 -ஆம் தேதி சதீஷ்குமார் தெறி பெயரை பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே விஜய் படத்திற்கு தெறி பெயரை பதிவு செய்ததாக ரிஜிஸ்டர் புத்தகத்தில் பக்கத்தை மாற்றியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கேட்டிருந்தால் நானே அந்தப் பெயரை தந்திருப்பேனே என்றும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பெறிய நடிகர்களின் படம் என்றால் விதிமுறையை தன் இஷ்டத்துக்கு மாற்றும் சுயநலவாதிகளால் திரையுலகம் நிரம்பியுள்ளது என்பதற்கு தெறி இன்னொரு சான்று.

இந்த பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க ரசிகர்கள் சமூக வளைதளங்களில் அனிருத் ஒரு பேட்டியில் விஜய் என்றால் தெறி என்று கூறியதாகவும் எடுத்துக்காட்டினர். தல ரசிகர்கள் மங்காத்தா ட்ரைலர் பார்த்தவுடன் தனுஷ், தல சும்மா தெறிக்கவிடப் போறாரு என குறிப்பிட்டு இருந்தார். என பழைய வரலாறுகளை புரட்டுகின்றனர்.

மற்ற சினிமா பார்வையாளர்கள் தெறி என்னும் வார்த்தை சங்க காலங்களில் சீவக சிந்தாமணி, தொழ்காப்பியம் போன்ற நூங்களில் வந்திருப்பதாக கிண்டலாக கூறி நகைப்புக்குள்ளாக்குகின்றனர்.