Home Tamil Cinema News விஜய் ஆண்டனியின் எமன் படத்திற்கு தியாகராஜன் தான் வில்லன்

விஜய் ஆண்டனியின் எமன் படத்திற்கு தியாகராஜன் தான் வில்லன்

126

vijay-antony-thayagarajan

நான் படத்தில் நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் பேர் புகழுடன் நல்ல வசூலையும் விஜய் ஆண்டனிக்கு பெற்றுக் கொடுத்தது.

இதனால் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இவர் களமிறங்கியிருக்கிறார். எமன் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அப்படத்தை ஜீவா ஷங்கர் இயக்குகிறார். எமன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் விஜய் ஆண்டனிக்கு வில்லனாக இயக்குநர் தியாகராஜன் நடித்து வருகிறார். நான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் இப்படமும் ஒரு வித்தியாசமான கதைதான் என்று கூறுகின்றனர். வருகின்ற மே மாதத்துடன் எமன் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here