Home Tamil Movie Reviews திருநாள் – விமர்சனம்

திருநாள் – விமர்சனம்

452
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

ஜீவா – நயன்தாரா ஜோடி மீண்டும் நடித்து தஞ்சை மண்மணம் கமழ வெளிவந்திருக்கும் படமான 'திருநாள்'. படத்தின் மேதான மக்களின் எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கூட, ஈ என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜீவா-நயன்தாரா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது, இப்படத்தை ராம்நாத் இயக்க, ஸ்ரீ இசையமைத்துள்ளார்.

2.7
இயக்கம்: பி.எஸ்.ராமநாத்
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசுவாமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார்
நடிகர்கள்: ஜீவா, நயன்தாரா, கருணாஸ், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ‘நீயா நானா’ கோபிநாத், பருத்தி வீரன் சுஜாதா, மீனாட்சி, ஜோ மல்லூரி, ரமா, அப்புக்குட்டி – ராமதாஸ்

பி.எஸ்.ராமநாத் எழுத்து, இயக்கத்தில் ஜீவா – நயன்தாரா ஜோடி மீண்டும் நடித்து தஞ்சை மண்மணம் கமழ வெளிவந்திருக்கும் படமான ‘திருநாள்’. படத்தின் மேதான மக்களின் எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கூட, ஈ என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜீவா-நயன்தாரா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது, இப்படத்தை ராம்நாத் இயக்க, ஸ்ரீ இசையமைத்துள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரித்துள்ளார்.

CIx7NvPUAAAdqqk

 

தஞ்சாவூர், கும்பக்கோணம் இந்த இரண்டு ஊரிலும் நாகா(சரத்) வைத்தது தான் சட்டம், ஒரு முறை அவர் உயிரை பறிக்க வருபவனை கொன்று ஜீவா நாகாவிடம் நற்பெயரை சம்பாதித்து அந்த கூட்டத்தில் ஒருவனாகின்றான்.

எதற்கு எடுத்தாலும் வெட்டுக்குத்து என ஜீவா யார் பேச்சையும் கேட்காமல் நாகா சொல்வதை மட்டும் கேட்டு, பல அநியாய வேலைகளை பார்க்கிறார், கிட்டத்தட்ட ஒரு கடவுள் போல் நாகவை ஜீவா பார்த்து வருகிறார்.’

jiiva-Stills-from-Thirunaal-Tamil-movie-5

ஒருக்கட்டத்தில் நாகா, தன்னை வெறும் கூலிக்காக மட்டுமே தான் பயன்படுத்துகிறார் என தெரியவர, இனி சண்டை எதுவும் வேண்டாம் என ஜீவா ஒதுங்கி இருக்கிறார், ஆனால், எங்கு சென்றாலும் தன்னை பிரச்சனைகள் சூழ்ந்து நிற்க ஜீவா மீண்டும் அருவாளை எடுக்க, போகப்போகும் உயிர் ஜீவாவா? நாகாவா? என்பதும்.

ஒரு இக்கட்டான சூழலில் நயன்தாராவை, ஜீவா காப்பாற்ற இருவருக்கும் ஏற்கனவே கனவிலும், நிஜத்திலும், இந்த இருவருக்கும் இருக்கும் காதல் பூத்து காய்த்து குலுங்குகிறது. அக்காதல், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கனிந்ததா? காலியானதா? என்பதும் தான் ‘திருநாள்’ படத்தின் மொத்தகதையும்.

maxresdefault

கதாநாயகர் ஜீவா – பிளேடு எனும் பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். வில்லன்நாகா – சரத் லோகித் சிவாவை கொண்டாடும் இடத்திலும் சரி, பின் அவரையே எதிர்த்து களம் இறங்கும் காட்சிகளிலும் சரிபிய்த்து பெடலெடுத்திருக்கிறார்.

அதே மாதிரி நயன் உடனான காதல் காட்சிகளிலும் பொருந்தி நடித்திருக்கிறார் ஜீவா. நயனுக்காக, எல்லையம்மனுக்கு நேர்ந்து கொண்டு மாலை தாலி வாங்கி கட்டும் காட்சியில், எதிரிங்க என்னை வெட்ட வந்தப்போ கூட நான் எந்தசாமியையும் வேண்டியதில்லை உனக்கே தெரியாமல் உன்னை எவ்வளவு நாளா லவ் பண்றேன் தெரியுமா? என்றபடி ஜீப்பில் கிளம்பும் இடத்தில் ஜீவா ரொமான்ஸ் காட்டியிருக்கிறார்.

thirunaal-movie-actress-nayantara-image

வித்யாவாக, கதாநாயகி நயன்தாரா, சாக்கு மண்டி முதலாளியின் மகளாக, டீச்சராக செம கச்சிதம். ஜீவா நயனை ஒரு காட்சியில், காப்பாற்றி காரில் வைத்துக் கொண்டு மாலை தாலி எல்லாம் வாங்கிடும் காட்சியில் நயன்தாரா பதறும் இடம் அருமை.

எப்போதும் வில்லன் என்றால் எதிராளிகளுக்கு தான் பயம் வரும், அவர்கள் குடும்பத்திற்கு தான் ஆபத்து வரும், ஆனால், சரத் தன் கூடவே இருப்பவர்கள் குடும்பத்திற்கு கூட குழியை பறிக்கிறார், அந்த அளவிற்கு கொடூரமாக இவரின் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டுள்ளது.

Thirunaal-movie-01

பிற நட்சத்திரங்களாக வரும், திக்குவாய் மணி – கருணாஸ், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏ சி பி புகழேந்தியாக ‘நீயா நானா’ கோபிநாத், பருத்தி வீரன் சுஜாதா, மீனாட்சி, நயனின் அப்பா ஜோ மல்லூரி, அம்மா ரமா, தாய் மாமா அப்புக்குட்டி – ராமதாஸ் எல்லோரும் பாத்திரமறிந்து நடித்துள்ளனர்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு தஞ்சாவூர், கும்பக்கோணம், திருச்சி என மூன்று ஊர்களையும் லைவ்வாக படம்பிடித்து காட்டியுள்ளது, படத்தில் பாதி நேரம் இரவு நேர காட்சிகள் தான், சவாலான காட்சிகளையும் அழகாக படம்பிடித்துள்ளார், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘பழைய சோறு பச்சை மிளகாய்.’, ‘கரிசகாட்டு கவிதையே’, ‘திட்டாதே நீ’ உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் அருமை.

மொத்தத்தில் “திருநாள்” – பார்க்கவேண்டிய நன்நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here