Home Tamil Cinema News என்னாது! அஜித்துக்கு இவங்க அம்மாவா..?

என்னாது! அஜித்துக்கு இவங்க அம்மாவா..?

119

தமிழ் சினிமாவில் லேட்டஸ்ட் அம்மா என்றால் பலரின் மனதிலும் பளிச்சிடுவது தீபா ராமானுஜம் தான்.பிச்சைக்காரன் படத்தில் விஜய் அண்டோனியின் அம்மாவாக நடித்திருக்கிறார்.

நிஜவாழ்க்கையில் இவர் ஒரு டயட்டீஷியன். தன் கணவரின் வேலை காரணமாக ஊர் ஊராக மாறியவர் கடைசியில் அதை விட்டுவிட்டு சினிமா பக்கம் வந்துவிட்டார்.

இதற்கு அஸ்திவாரம் என்னவோ தூர்தர்ஷன் அரசு தொலைக்காட்சி நிறுவனம் தான். அங்கு பல நாடகங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி நடித்திருகிறார். பின் அமெரிக்க சென்றவர் நாடக குழு ஒன்றை துவங்கினாராம்.

சில நாடகங்களை இயக்கியவர். சினிமாவில் இயக்குனராகும் ஆசையால் சென்னை வந்தாராம். பின் இது நம்ம ஆளு நயன்தாரா, ரஜினிமுருகன் சிவகார்த்திகேயன், ஸ்பைடர் மகேஷ் பாபு, விமானம் பிரித்விராஜ் ஆகியோருக்கு அம்மாவாக நடித்துள்ளார். விஜய், தனுஷ்க்கும் அம்மாவாக நடிக்க வேண்டும் ஆசை உள்ளது.

ஆனால் அஜித் இப்போது வேறு லுக்குக்கு மாறி விட்டார். அவருக்கு அம்மாவாக நான் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என தெரியவில்லையே என்கிறார்.