Home Tamil Cinema News இந்த வருடம் ஆஸ்கார் விருது வென்ற இந்தியர்

இந்த வருடம் ஆஸ்கார் விருது வென்ற இந்தியர்

108

50661052

இந்திய சினிமாவில் உள்ள நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்குக்கு இருக்கும் மிகப்பெரிய ஆசை என்பது ஆஸ்கர் விருது வாங்கவேண்டும் என்பதுதான். இந்த நிலையில் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 28ம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் இரண்டு இந்திய படங்கள் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இறுதி பட்டியலில் எந்த இந்திய படமும் இடம்பெறவில்லை. இந்திய சினிமாதுறையினருக்கு இது சோகமான செய்திதான் என்றாலும் சைன்டிஃபிக் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் க்ரவுண்ட் பிரேக்கிங்க் டிசைனுக்காக இந்தியரான ராகுல் தக்கார் விருது வென்றுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இவரோடு சேர்த்து இன்னும் பத்து தொழில்நுட்ப பிரிவுகளுக்கான விருதுகள் பிப்ரவரி 13ம் தேதி வழங்கப்படும். இந்த அறிவிப்பு ஆஸ்கார் விருதுகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts