Home Tamil Movie Reviews தூங்கா வனம் – விமர்சனம் 2015

தூங்கா வனம் – விமர்சனம் 2015

409

இயக்கம்: ராஜேஷ் எம் செல்வா

ஒளிப்பதிவு: சானு வர்கீஸ்

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல்

நடிகர்கள்: கமல் ஹாஸன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், ஆஷா சரத்

கமலின் இன்னொரு துணிச்சலான முயற்சி தூங்கா வனம். நகைச்சுவை இல்லை, காதல் இல்லை, டூயட் இல்லை. இத்தனை இல்லைகளுக்கு நடுவில்  கச்சிதமான திரைக்கதையில் விறுவிறுப்பாக நகர்கிறது படம்.

பணத்துக்காக எதையும் செய்யும் போதை மருந்து கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரி கமல் ஹாஸன். ஒருமுறை பெரிய போதை மருந்து பார்சல் இவரிடம் சிக்க, அதை அப்படியே அமுக்கிவிடுகிறார். இதை இன்னொரு போலீஸ் அதிகாரியான த்ரிஷா பார்த்துவிடுகிறார். ‘பொருளுக்கு’ சொந்தக்காரரான தாதா பிரகாஷ் ராஜ், கமலின் மகனை கடத்தி வைத்துக் கொண்டு டீல் பேச, மறைத்து வைத்த போதைப் பொருளை எடுக்க கமல் போகிறார். ஆனால் அங்கு பொருள் இல்லை. மிகுந்த நெருக்கடிக்குள்ளாகும் கமல், மகனை எப்படி மீட்கிறார்? போதைப் பொருளைக் கடத்தியவர் யார்? அதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

1447221146-1007ப்ரெஞ்சில் வெளியான ஸ்லீப்லெஸ் நைட்டை அனுமதி வாங்கி அப்படியே எடுத்திருக்கிறார்கள். கமலுக்கு அடுத்தபடி தூங்கா வனத்தின் கதாநாயகர்கள் ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸும், எடிட்டர் ஷான் மொகமத்தும். திரைக்கதையில் இருக்கும் பதட்டத்தை அப்படியே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். பின்னணி இசை அதற்கேற்ப ஒத்திசைந்து வருகிறது.
கமல் தொடங்கி அனைவருமே பெரிய நடிகர்கள். முதல் படத்தில் இவர்களை வைத்து வேலை வாங்கியது இயக்குனருக்கு பெரும் சவால். அதனை சாமர்த்தியமாக சமாளித்திருக்கிறார். லொட லொட ஜெகனைக்கூட அளவாக பேச வைத்திருப்பது, இயக்குனரின் திறமை.
1447220911-5004பெரிய எதிர்ப்பார்ப்புடன் வரும் பார்வையாளர்களை இந்தப் படம் எந்த அளவு திருப்திப்படுத்தும் என்ற கேள்வி உள்ளது. காரணம் போதை மருந்து கடத்தல், போலீஸ் அதிகாரி டபுள் க்ராஸிங், மகனை பணயமாக வைப்பது என்பதெல்லாம் தமிழுக்கு புதிய களமல்லவே! நடிப்பைப் பொருத்தவரை வழக்கமான கமல் ஹாஸன். குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆக்ஷன் காட்சிகளில் வயதைத் தாண்டி உழைத்திருக்கிறார்.

எந்த கதை சம்மந்தப்பட்ட படமாக இருந்தாலும் அதில் காதல், காமெடி, சென்டிமெண்ட் எல்லாம் சேர்த்து பரிமாறுவதே தமிழ் சினிமாவின் வழக்கம். அதுபோலான ரசனைகளுக்கு பழகியவர்களுக்கு தூங்கா வனம் திருப்தியளிக்காமல் போகலாம். அது பார்ப்பவர்களின் ரசனை குறைவே அன்றி படத்தின் குறையல்ல.

12-1447296740-thoonga-vanam-144419427590

சாம்ஸும் கமல் ஹாஸன் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சியில் ஏபிசி என்ற பாகுபாடு தாண்டி அரங்கம் அதிர்கிறது. படத்தின் முக்கிய பலம் ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் சனு வர்கீஸின் நுட்பமான ஒளிப்பதிவு. ஒரே ஒரு பாடல்தான். அதையும் வித்தியாசமாகப் படமாக்கியுள்ளனர். அட, அதுக்குள்ள முடிஞ்சிருச்சே எனும் அளவுக்கு படத்தின் நீளத்தைக் குறைத்திருப்பது நல்ல டெக்னிக். இல்லாவிட்டால் இந்தப் படம் பெரிய கொட்டாவியை வரவழைத்திருக்கும். அந்த வகையில் தப்பித்தது.

12-1447296746-thoonga-vanam-144419427540

பாடல்கள் அதிகம் என்பதாலோ என்னவோ, அதுக்குள்ள படம் முடிஞ்சிருச்சே எனும் அளவுக்கு படத்தின் நீளத்தைக் குறைத்திருப்பது நல்ல டெக்னிக். இல்லாவிட்டால் இந்தப் படம் பெரிய கொட்டாவியை வரவழைத்திருக்கும். அந்த வகையில் தப்பித்தது. ஆக்ஷன் த்ரில்லர் உங்களுக்கு பிடிக்கும் என்றால் தூங்கா வனம் மிகச்சரியான தேர்வாக இருக்கும்.