Home Tamil Movie Reviews தோழா – விமர்சனம்

தோழா – விமர்சனம்

652
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

வம்சி.பி இயக்கத்தில், நாகார்ஜூனா, கார்த்தி, அனுஷ்கா, தமன்னா, ஸ்ரேயா, பிரகாஷ் ராஜ், விவேக், ஜெயசுதா, கல்பனா உள்ளிட்ட பெரும் நட்சத்திங்கள் நடிக்க தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நாளில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘தோழா'.

3.5
இயக்கம்: வம்சி
ஒளிப்பதிவு: பி.எஸ்.வினோத்
இசை: கோபிசுந்தர்
தயாரிப்பு: பிவிபி சினிமாஸ்
நடிகர்கள்: நாகார்ஜூனா, கார்த்தி, அனுஷ்கா, தமன்னா, ஸ்ரேயா, பிரகாஷ் ராஜ், விவேக், ஜெயசுதா, கல்பனா

வம்சி.பி இயக்கத்தில், நாகார்ஜூனா, கார்த்தி, அனுஷ்கா, தமன்னா, ஸ்ரேயா, பிரகாஷ் ராஜ், விவேக், ஜெயசுதா, கல்பனா உள்ளிட்ட பெரும் நட்சத்திங்கள் நடிக்க தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நாளில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘தோழா’.

karthi-thozha-movie-photos-01

ஐந்தாண்டுகளாக, கை கால் விழுந்த நிலையில் வீல்சேரில் வாழ்க்கை நடத்தும் பெரும் தொழில் அதிபர் விக்ரம் ஆதித்யாவாக நாகார்ஜூனா, அவரது கேர் டேக்கராக வந்து சேருகிறார் கார்த்தி. நாகார்ஜூனாவின் செகரட்டரி தமன்னா மீது கசிந்துருகும் காதலுடன் நாகர்ஜூனாவிடம் தோழமை காட்டும் கார்த்தி, இருவரது வாழ்க்கையிலும் எவ்வாறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொண்டு வந்து அதன் வாயிலாக தன் வாழ்க்கையிலும் எவ்வாறு ஏற்றமும், மாற்றமும் காண்கிறார் என்பது தான் ‘தோழா” படத்தின் கதை கரு.

அவ்வளவு பெரிய பணக்காரரான நாகார்ஜுனாவை அசால்ட்டாக டீல் பண்ணும் கார்த்தியின் ஸ்டைலுக்கு நாகார்ஜுனாவே அடிக்ட் ஆவதுதான் அருமை. கார்த்தியின் இன்னொசன்ஸ் தியேட்டரை மட்டுமல்ல, திரைக்குள்ளிருக்கும் நாகார்ஜுனாவையும் சேர்ந்தே சிரிக்க வைக்கிறது. குறிப்பாக, ‘நம்மளே பெயின்ட் பண்ணிட வேண்டியதுதான்’ என்று வெறிகொண்டு கிளம்பும் கார்த்தி, அந்த பெயின்ட் ரகசியத்தை பிரகாஷ்ராஜிடம் அவிழ்க்கிற காட்சியில் தியேட்டரே அதிர்கிறது.

thozha2

சீனுவாக நடித்துள்ளார் கார்த்தி. சீனு நீ வர வேண்டாம் நீ அதிகமா பேசுவ என நாகார்ஜூனா சொல்ல, அதுக்காக நீங்க பேசம வந்துடாதீங்க ‘என்று கார்த்தி சொல்லும் காட்சி அருமை.

அண்ணா பஸ்ட் டைம்னா இவ்ளோ பணம் சம்பாதித்தது, சம்பாதித்ததே இது தான் முதல் தடவை.. என பெயிண்டிங் வரைந்து அதை நாகார்ஜூனா மூலம் விற்று உருகும் இடத்தில் இன்னும் கவருகிறார் கார்த்தி.

நாகார்ஜூனாவை சார் என கூப்பிடுவது, பிடிக்கல என கார்த்தி சொல்லி அதற்கு காரணமாக, ஸ்கூல் பிடிக்காது போனதே சார்களால தான் அதனால அண்ணான்னு கூப்பிடுவா என அனுமதி கேட்டு அதன் படியே கூப்பிடும் இடத்தில் மேலும் கவருகிறார் கார்த்தி.

Karthi-Tamanna-Thozha-Movie-Stills-5

பணக்காரரான நாகார்ஜுனா முடங்கிவிட்டார். பிரகாஷ்ராஜ் வேறு என்ட்ரி கொடுத்துவிட்டார். சொத்து, அபகரிப்பு, சவால், என்று கதை நகருவதற்கு ஏராளமான அபத்த வழிகள் இருந்தும், அதையெல்லாம் தவிர்த்திருக்கிறார் இயக்குனர் வம்சி. பிரகாஷ்ராஜ் கொஞ்சமே வந்தாலும், அவரது கதாப்பாத்திர நடிப்பு அருமை.

ஆண்டவன் பேட் பாய் என கார்த்தி, பிரகாஷ் ராஜிடம் பகலிலேயே பாரின் சரக்கு அடிச்சிட்டு உளறுவது, 5 வருஷமா நடக்கும் நாகார்ஜுனாவின் சர்ப்பரைஸ் பார்ட்டி யில பிரேயர்ல சைலன்ஸ் ஒ.கே பார்ட்டியில என்ன என பிரகாஷ்ராஜை கேட்டு கலாய்ப்பது.

karthi-thozha-movie-photos-02-660x330

ஜெயில்ல இருந்து வந்த அண்ணன் இருக்கான், ரோட்ல சுத்துற தம்பி இருக்கான், அப்படின்னு சொன்னா அவங்க அப்பா ஒத்துக்க மாட்டாரு என தங்கை சொல்லும் இடத்தில் கண்களாலேயே உருகுவது, எல்லவற்றையும் காட்டிலும் நாகார்ஜூனாவுடனான தோழமையில் நேர்மையும், உண்மையும் காட்டி உழைத்திருக்கிறார் என்பது தான் இப்படத்திற்கு பெரும் பலம்.

முதல் பார்வையிலிருந்தே தமன்னாவை துரத்தக் கிளம்பும் கார்த்தியின் குறும்புகள் ஒரு புறம் ரசிக்க வைக்க, தமன்னா விழுகிற அந்த செகன்ட்டுக்காக காத்திருக்கிறது மனசு.

நாகார்ஜுனா ஒரு மெல்லிய புன்னகையில், ஒரு வெற்று பார்வையில், ஒரு கண்ணசைவில் எல்லாவற்றையும் பேசி விடுகிறார். ஒரு மனுஷன் உட்கார்ந்தபடியே படம் முழுக்க வருவது, அப்படியே வந்தாலும் வினாடி நேரம் கூட அலுப்பு தட்டாமல் ரசிகனை ஆட்கொள்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமேயில்லை. பிளாஷ்பேக்கில் ஒரு டூயட் கூட பாடியிருக்கலாம். ஆனால் ஒரு ஷாட்டில் அவர் நடந்து வருவதாக காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.

dd

படத்தில் அனுஷ்கா இருக்கிறார், ஸ்ரேயா இருக்கிறார், ஆனால் அதோ என்பதற்குள் பறந்துவிடுகிறார்கள். கெஸ்ட் ரோல்தான். அதிலேயும் ரொம்ப ஜஸ்ட் ரோல்.

கோபிசுந்தரின் இசையில் பாடல்களை வைத்து திணிக்காமல், தேவைப்படுகிற இடத்தில் மட்டும் அளவாக வைத்திருக்கிறார்கள். பி.எஸ்.வினோத் ஒளிப்பதில், பாரிஸும் இந்தியாவும் ஜொலிக்கிறது.

மொத்தத்தில் தோழா – “ரசிகர்கள் கொண்டாடும் தொழா”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here