Home Tamil Cinema News குதிரை காலை உடைத்த பாஜக எம்எல்ஏ நரகத்தில் எரிய வேண்டும் என்று த்ரிஷா சாபம்!

குதிரை காலை உடைத்த பாஜக எம்எல்ஏ நரகத்தில் எரிய வேண்டும் என்று த்ரிஷா சாபம்!

119

trisha

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் தலைநகர் டேராடூனில் பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

அந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசின் குதிரைப்படை பிரிவு வந்திருந்தது. அப்போது கணேஷ் ஜோஷி வெறி வந்தவர் போல உருட்டுக்கட்டையை எடுத்து, போலீஸ்காரர் அமர்ந்திருந்த குதிரையொன்றின் கால்களை கொடூரமாக ஓங்கி பலமுறை அடித்தார்.

இந்த தாக்குதலினால் குதிரை அப்படியே கீழே விழுந்தது. அதன் காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விலங்குகள் நல ஆர்வலரான நடிகை திரிஷா, தனது கடும் கோபத்தை டிவிட் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த டிவிட்டில், குதிரை தாக்கப்பட்ட மீடியா செய்தியை ஷேர் செய்து, அதற்கு த்ரிஷா, “ஆம். உங்களை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும் என்று நான் வேண்டுதல் வைக்கிறேன். இது ஒரு அசிங்கம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த த்ரிஷாவின் கருத்துக்கு அவரது ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்ம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here