Home Health Women Health Care இயற்கை முறையில் ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறை சரிசெய்ய…

இயற்கை முறையில் ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறை சரிசெய்ய…

294

period_exercise91

மாதவிடாய் கோளாறால ரத்தப் போக்கு அதிகமாக வந்தாலும் ஆபத்து, வராமல் போனாலும் விபரீதம் தான். இதுக்கு மூலிகை வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கின்றது.

ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறை சரிசெய்ய:

  • அம்பது கிராம் கருஞ்சீரகத்தைப் பொன் நிறமா வறுத்துப் பொடித்து. அதனுடன் அம்பது கிராம் பனைவெல்லத்தைக் கலந்துகொள்ள வேண்டும். இதில் நெல்லிக்காய் அளவாக எடுத்து, காலை, மாலை இரண்டு வேளை வாயில போட்டு தண்ணீர் குடித்துக்கொண்டு வந்தால் ரத்தப்போக்கு சீராயிரும்.
  • 100 கிராம் சதக்குப்பையை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) பொன் நிறமாக வறுத்து. அதனுடன் 100 கிராம் பனை வெல்லத்தைக் கலக்க வேண்டும். இதைனுடன் முன்னால் கூறியது போல நெல்லிக்காய் சேர்த்து அளவுடன் சாப்பிட்டு, தண்ணி குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறு சரியாயிரும்.
  • மாதவிடாய்க் கோளாறுடன் வயிற்றுவலி, வயிற்றுப் புண் வந்து இம்சைப்படுத்தும். இதற்கு, இரண்டு கைப்பிடி குப்பைமேனிக் கீரையை எடுத்து வேக வைத்து கடைந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, வயிற்றுப் புண்ணெல்லாம் விலகி ஓடிப் போயிவிடும்.

அதிக ரத்தப்போக்கை நிறுத்த:

ரத்தப்போக்கால் அவதிப்படுகின்றவுர்களுக்கு அருமையான வைத்தியம் இது.

  • காடு மேடுகளில் ஆங்காங்கே விளைந்து கிடக்கும் நாயுருவி இலையை எடுத்து. நல்லா இடிச்சி 100 மில்லி அளவுக்கு சாறு எடுக்க வேண்டும். பிறகு, இதோட ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து 3 நாளைக்குக் காலை ஒரு வேளை மட்டும் வெறும் வயிறில் குடித்து வந்தால் ரத்தப்போக்கு உடனே சரியாகிவிடும். இதைக் குடித்த பிறகு ஒன்னரை மணி நேரம் கழித்துதான் எதுவுமே சாப்பிட வேண்டும்.

வெள்ளைப்படுதல் நிற்க:

  • வெள்ளைப்படுதல் இருந்தால் பெண்களுக்கு பெரும் அவஸ்தைதான். இதற்கு 10 கிராம் வால்மிளகை எடுத்து பொடி செய்துகொள்ள வேண்டும். அதனுடன் 5 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் போதும். வெள்ளைப்படுதல் முழுமையாக குணமாகிவிடும்.
  • இதைபோல, காய்ந்த அசோகப்பட்டையை எடுத்து நன்றாக இடித்து. இந்தத் தூளை 10 கிராம் எடுத்து 200 மில்லி தண்ணீரில் போட்டு, 100 மில்லி ஆகின்ற அளவு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதில் 25 மில்லி எடுத்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பூரணமாக குணமாகிவிடும்.