Home Tamil Cinema News அட்லீயின் அடுத்த படம்.. தலைப்பும் ரெடி!

அட்லீயின் அடுத்த படம்.. தலைப்பும் ரெடி!

43

தெறி படத்தை தொடர்ந்த இளையதளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக மெர்சல் படத்தில் பணியாற்றுகிறார் அட்லீ.

இந்த படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் மூன்றாவது முறையாக பணியாற்றவுள்ளனர் என கூறப்படுகிறது.

அந்த படத்திற்காக ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பை அட்லீ தற்போது பதிவு செய்துள்ளாராம்.

மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறன் தமிழன் பாடல் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றதை தொடர்ந்தே அட்லீ இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார் என சொல்லப்படுகிறது.

மேலும் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், அது முடிந்தவுடன் அட்லீ படம் துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.