Home Tamil Cinema News 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் சிவகார்த்திகேயன்

31வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் சிவகார்த்திகேயன்

183

birthday-wishes-to-sivakarthikeyan

நடிகர் சிவகாத்திகேயன் சிவகார்த்திகேயன் இன்று தனது 31 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் போட்டிபோட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் காமெடியனாக இருந்து தனது திறமைகளை மென்மேலும் வளர்த்து நடனம், நடிப்பு என அனைத்தையும் கற்று சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் விடப்பிடியாக இருந்து தனது அடுத்தடுத்த படங்கள் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்ந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி கலந்த தனது இயல்பான நடிப்பின் மூலம் இளம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அதன் பிறகு அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

தற்போது அவர் நடித்து வெளிவந்த ரஜினிமுருகன் படம் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றியை தேடித்தந்தது. இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் இடத்தையும் சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டார். இவரது அயறாத உழைப்பினால் தான் அவர் திரையில் நுழைந்த நாங்கே ஆண்டுகளில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருக்கிறது.

எங்க வீட்டுப் பிள்ளை… சங்கத் தலைவர்… போஸ் பாண்டி… சிவகார்த்திகேயனுக்கு தி நியோ டிவி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.