Home Tamil Cinema News பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்

74

tom-cruise

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம்குரூஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள படத்தில் இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மம்மி படத்தின் தொடர் பாகமாக 4வது பாகம் ரெடியாகவுள்ளது. இப்படத்தில் முந்தைய படத்தின் ஹீரோவிற்கு பதிலாக டாம் குரூஸ் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இப்படத்தை அலெக்ஸ் குர்ட்ஸ்மேன் இயக்கவுள்ளார். இவருடைய இயக்கத்தில் ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படத்திற்கு ரகுமான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்லம்டாக் மில்லியனர்ஸ்’ என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருது பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோலிவுட், பாலிவுட் படங்களுக்கு மட்டுமின்றி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.