Home Tamil Breaking News பிரியங்காவுக்கு ‘டெங்கு’: டில்லியில் தீவிர சிகிச்சை

பிரியங்காவுக்கு ‘டெங்கு’: டில்லியில் தீவிர சிகிச்சை

22

புதுடில்லி,காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காங்., தலைவர் சோனியாவின் மகளும், ராபர்ட் வாத்ராவின் மனைவியுமான, பிரியங்கா, 45, காய்ச்சல் காரணமாக, 23ல், டில்லி, கங்காராம் மருத்துவமனைக்கு சென்றார்.அவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, அதே மருத்துவமனையில், பிரியங்கா, ‘அட்மிட்’ செய்யப்பட்டார். டாக்டர்கள், அவருக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, காய்ச்சல் குறைந்துள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளனர்.