Home Tamil Cinema News த்ரிஷாவுக்கு திருமணத்தைப் பற்றி கவலையில்லையாம்!

த்ரிஷாவுக்கு திருமணத்தைப் பற்றி கவலையில்லையாம்!

141

trisha

நடிகை த்ரிஷா தமிழில் நீண்ட நாட்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 30 வயதினை கடந்துவிட்டாலும் இன்னமும் அவரது இளமை அழகு குறையவே இல்லை. இருப்பினும் அவரது திருமணம் பற்றி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கேள்விகள் கேட்க்கப்படுகின்றது. இதுபற்றி அவர் கூறியதாவது,

சினிமாவில் இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஹீரோயினாக நடித்து வருவதில் எந்த ரகசியமும் இல்லை. என்னைத் தேடி வரும் வாய்ப்புகள் பிடித்திருந்தால் நடிக்கிறேன். யாருடைய வாய்ப்பையும் நான் தட்டிப்பறித்தது கிடையாது. சில கதைகளைக் கேட்கும்போது, இதில் நடிப்பதா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்படும்.

அப்போது என் அம்மாவின் உதவியை நாடுவேன். கதையைக் கேட்டுவிட்டு, இது உனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று, அவர் சொன்னால் மட்டுமே அந்தப் படத்தை ஒப்புக்கொள்வேன்.

இப்போது கொடி, போகி உட்பட சில படங்களில் நடிக்கிறேன். ஒரேமாதிரி கேரக்டரில் நடிப்பதை நான் விரும்பவில்லை. பேய்க் கதையில் நடிக்க ஆசைப்பட்டேன். அது அரண்மனை 2 மூலம் நிறைவேறியுள்ளது. என் நடிப்பை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

என் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். அதுபற்றி நானே கவலைப்படாதபோது, மற்றவர்கள் ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறேன்.

என் வாழ்க்கையில் கடவுள் என்ன தருகிறாரோ அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது. நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. என் வருங்கால கணவரை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பை அம்மாவிடம் ஒப்படைத்து விட்டேன் என்று த்ரிஷா கூறினார்.