Home Tamil Cinema News மீண்டும் இணைந்த த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஜோடி

மீண்டும் இணைந்த த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஜோடி

105

GV Prakash Kumar, Anandhi in  Trisha Illana Nayanthara Movie Images

சமீபத்தில் வந்த படங்களில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் அனைவரையும் கவர்ந்தது. பலதரப்பில் இருந்தும் விவகாரமான படம் என்ற விமர்சனத்தையும் பெற்றது.

அப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் சிம்பு நடிப்பில் ஏஏஏ என்ற படத்தை இயக்கி வருகிறார். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா பட வெற்றி மற்றும் சிம்பு படத்தின் தலைப்பின் காரணமாக ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திரையுலகில் ஏகப்பட்ட டிமாண்ட்கள் ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் தனது முதல் பட நாயகன் ஜீ.வி.பிரகாஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஸ்டீவ்ஸ் கார்னர் என்ற படநிறுவனம் இவர்கள் இணையும் படத்தை தயாரிக்கிறது. இந்தப்படமும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போல விடலைக் காதலை மையப்படுத்தியது என்கிறார்கள்.