Home Tamil Cinema News மீண்டும் இணையும் த்ரிஷா இல்லனா நயன்தாரா கூட்டணி!

மீண்டும் இணையும் த்ரிஷா இல்லனா நயன்தாரா கூட்டணி!

76

Trisha Illana Nayanthara

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் இந்தப்படம் இளைஞர்களை மிகவும் கவந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சிம்புவை வைத்து புதிய படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்தப்படத்தில் சிம்பு 3 கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்தபிறகு, ஜி.வி.பிரகாஷுடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் ஆதிக்.

இந்தப்படமும் த்ரிஷா இல்லனா நயன்தாராவை போலவே இளைஞர்களை கவரும் வகையில் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால் இப்போதே இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here