Home Tamil Cinema News கர்ஜிக்கும் த்ரிஷா… ஆக்‌ஷனில் அசத்தல்!

கர்ஜிக்கும் த்ரிஷா… ஆக்‌ஷனில் அசத்தல்!

76

கொடைக்கானலின் கொண்டை ஊசி வளைவு சாலைகளில் தன்னந்தனியாக டெரர் ஸ்பீடில் ஜீப் டிரைவிங், காரைக்குடியில் பட்டையைக் கிளப்பும் புழுதியில் ஹார்ஸ் டிரைவிங் என்று ரிஸ்கெடுத்து அதிரடி ஆக்‌ஷன் காட்டுகிறார்.

கர்ஜனைக்காகத்தான் இப்படி வீறுகொண்டு எழுந்திருக்கிறார். திரிஷாவுக்கு நாயகி படத்துலேயே ஆக்‌ஷன் சீக்குவென்ஸ் இருந்தது.

அதுலே பிரமாதப்படுத்தி இருந்ததாலேதான் இப்படி ஒரு கதையை தைரியமா அவங்ககிட்டே சொன்னேன். கதையைக் கேட்டதுமே சம்மதிச்சி உடனே கமிட் ஆயிட்டாங்க. சும்மா நடிச்சு கொடுப்போம்னு ஏனோதானோன்னு பண்ணாமல் ரியலாகவே கடினமா உழைச்சுக் கொடுத்திருக்காங்க. ரோப் ஷாட்ல டூப் போடாமல் ஸ்டண்ட் பண்ணி யூனிட்டையே மிரளவச்சிட்டாங்க என்று ஃபுல் அண்ட் ஃபுல் திரிஷா புராணம் பாடுகிறார் கர்ஜனையின் அறிமுக இயக்குநர் சுந்தர் பாலு.

டைட்டில் காரணம் : ரஜினிக்கு ஆக்‌ஷன் இமேஜ் கொடுத்ததில் முக்கியமான படம் கர்ஜனை. இந்தக் கதைக்கு ரொம்ப பொருத்தமா இருந்ததாலே விரும்பி வெச்சிருக்கோம்.

கர்ஜனையின் கதை: நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்னை நம்மகிட்ட வரும்போது அதனால் ஏற்படும் கோபம் தான் இந்த கர்ஜனை. வெஸ்டர்ன் டான்ஸரான திரிஷா, ஒரு ஈவென்ட்டுக்காக கொடைக்கானல் போறாங்க. அங்கே அவங்களுக்கு நேரும் பிரச்னை. அதிலிருந்து அவங்க எப்படி தப்பிக்கிறாங்க? என்பதே படத்தின் ஒன்லைன் கதை. திரிஷா தவிர வம்சி கிருஷ்ணா, அமித், வடிவுக்கரசி, சுவாமிநாதன், தவசி, மதுமிதா, மதுரைமுத்து, ஆர்யன், ஸ்ரீரஞ்சனின்னு கதைக்குத் தேவையான ஸ்டார்கள் இருக்காங்க. சௌகார்பேட்டை, பொட்டு படங்களின் இணைத் தயாரிப்பாளர் ஜோன்ஸ் இந்தப் படத்தின் மூலம் சோலோ தயாரிப்பாளராக புரோமோஷன் ஆகியிருக்கார்.

எங்களுக்கு டெக்னிக்கலாகவும் ஸ்டிராங் டீம் அமைஞ்சிருக்கு. தெலுங்கில் பல படங்கள் ஒர்க் பண்ணின சிட்டிபாபு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். மொட்ட சிவா கெட்ட சிவா அம்ரீஷ் இசையமைச்சிருக்கார். இப்போ விலங்குகளைப் பயன்படுத்துவதில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கறதால.. படத்துல ஒரு காமிக் ஃபைட் முயற்சி பண்ணியிருக்கோம். கிராபிக்ஸ்ல கரடி இடம்பெறும் அந்த ஃபைட் சீனில் காமெடியும், கரடி சேஸிங்கும் பிரமாதமா பேசப்படும்.

58வது படம்: திரிஷாவுக்கு இது 58வது படம். தீபிகா படுகோனே, சமந்தானு நிறைய டாப் ஸ்டார்களோட விளம்பரப் படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். ஆனா, திரிஷா அவ்வளவு டெடிகேட்டட் பொண்ணு. படத்துல நீங்க ஹில்ஸ் ஏரியாவில் ஜீப் ட்ரைவ் பண்ண வேண்டியிருக்கும். உங்களுக்கு ஜீப் ஓட்டத்தெரியுமானு கதை சொல்லும் போதே அவங்ககிட்ட கேட்டேன். சிரிச்சுக்கிட்டே தெரியும்னு சொன்னாங்க. சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருக்காங்கனு நினைச்சேன். ஆனா, நிஜமாகவே டிரைவிங்ல கலக்கிட்டாங்க.