Home Tamil Cinema News த்ரிஷா எனக்கு தங்கச்சியென கூறி பல்டி அடித்த ஆர்யா!

த்ரிஷா எனக்கு தங்கச்சியென கூறி பல்டி அடித்த ஆர்யா!

140

sarvam

நடிகர் ஆர்யா. இவர் எந்த கதாநாயகியுடன் இணைந்து நடித்தாலும் கிசுகிசு வந்துவிடும். தமிழ் சினிமாவின் ப்ளே பாய் என்று சொல்லப்படும் ஒரே நடிகர் இவர்தான்.

இந்த நிலையில் ஆர்யாவும், த்ரிஷாவும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்களாக இருந்தனர். இருவரும் ‘சர்வம்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

ஆர்யா பிரியாணி கொடுத்த நாயகிகளுள் த்ரிஷாவும் ஒருவர். மற்ற நடிகைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது போலத்தான் த்ரிஷாவுடனும் ஆர்யா பழகி வந்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பெங்களூர் நாட்கள் படத்தின் ப்ரோமோஷனில் இருந்த போது, இப்படம் குறித்து சில டுவிட் செய்தார்.

அதில், த்ரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி ஆனால் ராணாவிற்கு இல்லை என கிண்டலாக தெரிவித்தார். ஆனால் இதை ஆமோதித்த த்ரிஷா, ‘ஆர்யா நல்ல மனிதர். அவர் உடனிருந்தால் பாதுகாப்பாக இருப்பது போன்ற உணர்வு வரும்’ என்று கூறினார்.